இந்த விஷயத்தை இந்தியா மாதிரி வேறு எங்கேயும் பாத்ததில்லை.. டெல்லியின் 22 வயது ஆஸி வீரர் பேட்டி

Jake Frezar McGurk
- Advertisement -

ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்யாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் 39, ஆயுஸ் படோனி 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய டெல்லிக்கு பிரித்வி ஷா 32, கேப்டன் ரிசப் பண்ட் 41, ஜேக் பிரேஷர்-மெக்குர்க் 55 ரன்கள் அடித்தனர்.

அதனால் 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த டெல்லி தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லியின் இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். மறுபுறம் 13 தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பின் 160+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வேற லெவல் இந்தியா:
முன்னதாக இப்போட்டியில் டெல்லி அணிக்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 22 வயதாகும் இளம் வீரர் ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் அறிமுகமாக களமிறங்கினார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரில் ஏபி டீ வில்லியர்ஸை முந்தி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமான சதமடித்து உலக சாதனை படைத்த அவர் இம்முறை டெல்லி அணிக்காக வாங்கப்பட்டார்.

அந்த வாய்ப்பில் அறிமுகப் போட்டியிலேயே க்ருனால் பாண்டியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 55 (35) ரன்கள் குவித்து டெல்லியின் வெற்றியை எளிதாக்கினார். அத்துடன் டெல்லிக்காக அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் உலகில் வேறு எங்கும் பார்க்காத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை திருவிழா போல் கொண்டாடுவதாக பிரேஷர்-மெக்குர்க் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 5 – 6 ஆட்டங்களில் ஓரங்கட்டப்பட்ட எனக்கு புதிய பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆட்டம் பேட்டை அதிகமாக சுற்றாமல் பந்தை நடுப்பகுதியில் கண்டுபிடித்து அடிப்பதற்கான முயற்சியாகும். கடந்த 12 மாதங்களாக அதைத்தான் செய்ய முயற்சித்து வருகிறேன். கவர்ஸ் திசைக்கு மேலே அடித்த ஷாட் எனக்கு பிடித்தது”

இதையும் படிங்க: நான் மட்டும் டெல்லி அணியில் இருந்திருந்தா அடி வெளுத்திருப்பேன்.. ப்ரித்வி ஷாவை கடுமையாக சாடிய – ஹர்பஜன் சிங்

“ஆஃப் சைட்க்கு மேலே அடிப்பதை விட சிறந்த ஷாட் எதுவுமில்லை. பவர் பிளேவுக்கு வெளியே பேட்டிங் செய்ய தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறேன். இந்தியாவில் இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இந்த நாடு வித்தியாசமானதாக இருக்கிறது. இதைப் போல் எங்கும் பார்த்ததில்லை. இதற்கு முன் கேள்விப்பட்ட நான் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். இன்னும் 8 வாரங்கள் இங்கே இருக்கப்போவது சிறப்பானதாகும்” என்று கூறினார்.

Advertisement