இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதியான நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
அதனைத்தொடர்ந்து முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஜெய்ஸ்வால், அஷ்வின், ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 376 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய வங்கதேசம் அணி அவர்களது முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு சுருண்டது.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 118 பந்துகளை சந்தித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அவர் அடித்த இந்த அரைசதத்தின் மூலம் 147 வரலாறு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பேட்ஸ்மேனாக ஒரு மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி அவர் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை சொந்த மண்ணில் அவர் விளையாடியுள்ள 10 இன்னிங்ஸில் 755 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் முதல் 10 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ஜார்ஜ் ஹெட்லி என்பவர் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் 747 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிளிண்டாப் கூட சண்டை போட்டு 6 சிக்ஸ் அடிச்சதுக்கு அப்புறம் தோனி என்கிட்ட சொன்னது இதுதான் – யுவ்ராஜ் சிங் பகிர்வு
தற்போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.



