- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமில்ல.. சுப்மன் கில்லுக்கும் அதே நிலைமை தான் – வெளியான தகவல்

அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோருக்கு இடமில்லை :

அதனை தொடர்ந்து இந்திய அணியானது அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றது. எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

- Advertisement -

இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும் பி பிரிவில் : ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றிருக்கும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.

அதில் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அசத்தலாக செயல்பட்ட கேப்டன் சுப்மன் கில் மற்றும் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று பலரும் விரும்பினர். ஏனெனில் இளம் வீரர்களான அவர்களால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமல்லாமல் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லையும் டி20 அணியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சொந்த பொண்ணுக்கு செலவு பண்ணமாட்டாரு.. ஆனா அவளோட தோழி கும்பத்துக்கு.. ஷமி மீது – முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

அவர்களுக்கு அடுத்து திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ரியான் பராக் என இளம் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதாலும் இவர்கள் இருவரையும் அணியில் சேர்க்க முடியாது என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் ஆசிய கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் கசிந்துள்ளது.

- Advertisement -