கார்த்திக் நீக்கப்பட்டு ஜாதவ் அணியில் இடம்பெற இதுதான் காரணம் – தேர்வுக்குழு தலைவர்

Jadhav

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று முன்தினம் மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதில் இம்முறை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுக்கும் தனித்தனி அணி அறிவிக்கப்பட்டது.

Karthik

இந்த தொடரில் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடாத மற்றும் வயதில் மூத்த வீரர்களான கார்த்திக் மற்றும் ஜாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அதன்படி தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதேவேளையில் ஜாதவ் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தேர்வு குழு தலைவர் அணி தேர்வு முடிந்த பின் அளித்த பேட்டியில் கார்த்திக் மற்றும் ஜாதவ் குறித்து கூறியதாவது : கார்த்திக் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடாத காரணத்தினாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்த தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. ஜாதவை ஒரு நாள் அணிக்கு தேர்வு செய்திருக்கிறோம். ஏனெனில் அவர் உலக கோப்பை தொடரில் எந்த தவறும் செய்யவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்.

Jadhav

மேலும் அவருக்கு ஒரு வாய்ப்பினை அளிக்கவே மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவரை தேர்வு செய்துள்ளோம். அவர் அணிக்கு தேவையான வீரர் என்றே நாங்கள் கருதுகிறோம் அவரின் பங்களிப்பு இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement