இந்த உலககோப்பையோடு இவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது – விவரம் இதோ

pandya

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Jadhav

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இனி வரும் தொடர்களில் மூத்த வீரர்களின் பதிலாக இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. தோனி இன்னும் சில மாதங்களில் ஓய்வினை அறிவித்து விடுவார் என்று தெரிகிறது.

மேலும் இந்திய அணியின் வீரர்களான கார்த்திக் மற்றும் ஜாதவ் ஆகியோர் அடுத்து வரும் தொடர்களில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் மூத்த வீரர்கள் என்ற அடிப்படையில் உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவற விட்டதால் இனி வரும் தொடர்களில் அவர்கள் நிச்சயம் புறக்கணிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.

Karthik

மேலும், அவரர்களுக்கு பதிலாக புதிய இளம் திறமைசாலிகளை இந்திய அணி தேர்ந்தெடுக்க உள்ளது. எனவே கார்த்திக் மட்டும் ஜாதவ் ஆகியோர் நிச்சயம் அணியில் இருந்து உடனடியாக நீக்கப் படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தோனி பொறுத்தவரை அவராகவே ஓய்வு முடிவினை எடுக்கும்வரை அவர் இந்திய அணியில் இணைந்திருப்பார். இனி வரும் தொடர்களில் இந்தியாவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.

- Advertisement -