கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிவுக்கு வர இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் – இவர்களுக்காக இந்த நிலைமை

Kohli
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Jadhav

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதால் இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் அவர்களுடைய வாய்ப்பை இழக்க உள்ளனர். மேலும் அவர்கள் இனிமேல் இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது எட்டா கனி ஆகியுள்ளது.

அவர்கள் யார் யார் எனில் உலக கோப்பை தொடரில் இடம்பெற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர்தான். ஏனெனில் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தெரிவு செய்யப்பட்ட ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.

Karthik

மேலும் இருவரும் வயது மூத்த வீரர்கள் என்பதால் இனி வரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என்பதால் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது என கூறலாம். ஏனெனில் கார்த்திக் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் தனது இடத்தை உறுதி செய்யாமல் ஆடிவரும் தினேஷ் கார்த்திக் இனிமேல் அணியில் இடம் பிடிப்பது கடினம். அதேபோன்று ஜாதவ் அணியில் இடம் பிடிப்பது கடினம் என்றே தோன்றுகிறது. எனவே அவர்கள் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement