நல்ல கிரிக்கெட் வீரர் தானா என்பதை நிரூபிக்க அவசியமில்லை – ஓபனாக பேசிய ஜடேஜா

Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா பல வருடமாகவே இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் முக்கியமான அரையிறுதி போட்டியில் ஆடிய ஜடேஜா தன்மீது விமர்சனத்திற்கு தனது அபார பேட்டிங் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

Jadeja 1

- Advertisement -

59 பந்துகளை சந்தித்த அவர் 77 ரன்கள் குவித்து இந்திய அணியை நம்பிக்கையாக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். இறுதியில் அவர் அவுட்டாக இந்திய அணி துரதிஷ்டமாக தோல்வியை தழுவியது. அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களிலும் ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு விளையாடி வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் அந்த போட்டி குறித்து பேட்டி ஒன்றை அளித்த ஜடேஜா கூறுகையில் : நான் நல்ல விளையாட்டு வீரர் என்பதை உலகிற்கு நிரூபிப்பதைவிட எனக்கு நானே நிரூபிக்க வேண்டி உள்ளது. இந்த வருடம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நான் பங்கேற்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என முழு திறமையும் நான் வெளிப்படுத்தி உள்ளேன்.

Jadeja

மேலும் இந்திய அணிக்காக விளையாட ஆசைப்படுகிறேன் எனக்கு நானே என்னை நிரூபித்து எனது பங்களிப்பை இந்திய அணிக்காக முழுமையாக அளிக்க கடினமாக உழைத்து வருகிறேன் என்றும் இந்த தொடர்களில் இந்திய அணி வீரர்கள் நிறைய கேட்சிகளை தவறிவிட்டார்கள் அவ்வாறு நடந்து இருக்க கூடாது அடுத்த தொடரில் இது சரி செய்யப்படும் என்றும் ஜடேஜா கூறினார்.

Advertisement