முதல் இன்னிங்சில் இதை மட்டும் பண்ணாலே போதும். பேட்ஸ்மேன்களுக்கு டிப்ஸ் கொடுத்த ஜடேஜா – விவரம் இதோ

Jadeja-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இரண்டாவது நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாலும் துவக்க வீரர் இடத்திற்கு ஒரு குறை இருந்தது. அதனை போக்கும் வகையில் இம்முறை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், நேதன் லையன் போன்ற பலமான பந்துவீச்சு கூட்டணிக்கு எதிராக இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

பின்னர் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை அடித்து உள்ளது. புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். மேலும் நாளை நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிகளவு ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியை விட முன்னிலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gill

இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலாக பவுலிங் செய்த ஜடேஜா நாளைய போட்டி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சில டிப்ஸ்களை போட்டி முடிந்தவுடன் வழங்கியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

Jadeja

இன்று முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அடித்த ரன்களை பற்றி நாம் யோசிக்க வேண்டாம் என்றும், அடுத்த மூன்றாவது நாளில் முழுவதும் பேட்டிங் செய்ய மட்டுமே நாம் நினைக்க வேண்டும் நான்கு முதல் ஐந்து சீசன்கள் வரை நிதானமாக பேட்டிங் செய்தாலே நமக்குத் தானாக ரன்கள் வரும் அதன் மூலம் நம் போட்டியில் முன்னிலை பெறலாம் என்று ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement