சிட்னி டெஸ்ட் போட்டியில் எலும்பு முறிவு ஏற்படும் நான் இதற்க்கு தயாராகவே இருந்தேன் – ஜடேஜா ஓபன்டாக்

Jadeja
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரஹானே தலைமையிலான இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. விராட் கோலி தலைமையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. அதன்பிறகு நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இளம் வீரர்களுடன் களமிறங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தது.

Jadeja-2

- Advertisement -

மேலும் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி அஷ்வின் மற்றும் விகாரி ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் போட்டியை டிரா செய்தது. அதனைத் தொடர்ந்து பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 32 ஆண்டுகள் கழித்து இதுவரை அந்த மைதானத்தில் யாரும் வீழ்த்தாத ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா பேட்டி அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் நாங்கள் சுருண்டு தோற்றதால் எங்களுக்கு மிகப்பெரிய சவால் அடுத்த போட்டியில் ஏற்பட்டது. எப்படி அதிலிருந்து மீள்வது என்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பலம் வாய்ந்தது இவை எல்லா விடயத்தையும் நாங்கள் கலந்தாலோசித்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம்.

jadeja 1

அந்த போட்டியின்போது ரஹானே ரன் அவுட் ஆனார் இது துரதிஷ்டவசமானது. எங்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இது நிகழ்ந்துவிட்டது. அவரும் நானும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த போட்டியில் பெரிய பாட்னர்ஷிப்பை உருவாக்கி நெருக்கடி கொடுத்தோம். ரஹானே அவுட் ஆன பிறகும் நாங்கள் முன்னிலை பெற முடிந்தது. அதற்கடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் மற்றும் விஹாரி மிகவும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை டிரா செய்தனர்.

- Advertisement -

கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் அவர்கள் பேட்டிங் செய்தனர். அந்த போட்டியின் முதல் இனிங்ஸில் போது எனது கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் எனது பங்களிப்பு தேவைப்படும் என்று கருதி நான் தயாராகவே இருந்தேன். எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அதற்கு மருந்து செலுத்தி கொண்டு அந்த போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற வகையில் எல்லா முறையிலும் நான் களமிறங்க தயாராக இருந்தேன்.

ஆனால் விகாரியும், அஷ்வினும் சிறப்பாக இறுதி வரை விளையாடி போட்டியை டிரா செய்தனர் என்று ஜடேஜா கூறியுள்ளார். ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்ட பின் இரண்டாவது இன்னிங்சின் போது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு பேட்டிங் செய்ய தயாராக இருந்த ஜடேஜாவின் புகைப்படமும் அப்போது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement