INDIA : உலகக்கோப்பை தொடரில் எனது திட்டம் இதுதான் – ஜடேஜா திட்டவட்டம்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட

rohit-jadeja
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

india

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தனது திட்டத்தை பற்றி இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த பேட்டியில் ஜடேஜா கூறியதாவது : இந்த உலக கோப்பை தொடரில் என் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்திய அணி சிறப்பான பங்களிப்பை அளிக்க நான் காத்திருக்கிறேன்.

இந்த தொடரில் எனது திட்டம் முழுவதும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி சிறப்பாக பந்துவீசுவது மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன். ஏனெனில் இங்கிலாந்து மைதானங்கள் தட்பவெட்பம் எங்களுக்கு ஏற்றவாறு உள்ளது. மேலும் இந்த சூழ்நிலைக்கு ஏற்ப எங்களால் மாற்றி அமைத்து கிரிக்கெட்டை ஆட முடியும். அதனால் எதிரணி வீரர்கள் விளையாடும் பொழுது அவர்களை அழுத்தத்திற்கு தள்ளி ரன்களை குவிக்க முடியாமல் திணற வைத்து பிறகு அவர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

jadeja

இதுவே எனது திட்டம் மேலும் பேட்டிங்கிலும் என்னால் இங்கே சிறப்பாக செயல்பட முடியும். எனவே இரண்டிலும் நான் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன் என்று ஜடேஜா கூறினார். ஜடேஜா கடந்த நியூசிலாந்து எதிரான பயிற்சி போட்டியில் சாப்பாடு வீரர்கள் பேட்டிங் செய்ய திணறியபோது பின் வரிசையில் இறங்கி 54 ரன்கள் குவித்தது இந்திய அணி ஒரு சுமாரான ரன்களை குவிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement