எவ்ளோ போராடினோம் ஆனா தோத்துட்டோம். வாழ்நாளின் சோகமான நாள் அதுதான் – மனம்திறந்த ஜடேஜா

Jadeja
- Advertisement -

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக கோப்பை தொடரின் செமி பைனல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் மட்டுமே எடுத்தது எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என இந்திய ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

Jadeja

- Advertisement -

ஆனால் இந்தியா களம் இறங்கிய உடன் 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்தது .அப்போது ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவின் நாயகன் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார் அதிரடியாக விளையாடிய ரவிந்திர ஜடேஜா 54 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இருந்தார்.

அப்படி ஆடிவிட்டு தனது ஆட்டத்தை மோசமான ஷாட் அடி அவுட் ஆனார். அதன்பின்னர் நம்பிக்கை நாயகன் தோனி களத்தில் இருந்தார் தேவையில்லாமல் இன்னொரு ரன் ஓடி தனது விக்கெட்டை இழந்து தோனி வெளியேறினார். அப்போது இந்தியாவின் உலகக்கோப்பை கனவு பறிபோனது. அதன்பிறகு தற்போது வரை தோனி ஆடுகளத்திற்கு திரும்பவே இல்லை.

Jadeja 1

இது குறித்து ரசிகர்கள் நேற்று சமூக வலைதளங்களில் சோகமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்தார்.தனது ட்விட்டர் பக்கத்தில்… நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை கொடுத்தோம் ஆனால் ஒரு சில நேரங்களில் தோற்று விடுகிறோம். இது மறக்க முடியாத ஒரு சோகமான நாளாக அமைந்தது என்று பதிவிட்டிருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.

England

இதற்கு அடுத்து இறுதிப் போட்டிக்குச் சென்று நியூசிலாந்து அணி அங்கும் சர்ச்சைக்குள்ளான முறையில் உலக கோப்பையை இங்கிலாந்திடம் நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் தொடரை நடத்திய இங்கிலாந்து அணியே முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement