MS Dhoni : தல தோனிக்கு வராத ஒரு செயல் என்றால் அது இதுதான் – ஜடேஜா ஓபன் டாக்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

dhonibat
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

rohit-jadeja

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜாவிடம் ஜாலியாக ஒரு பேட்டி மூலம் ராபிட் பயர் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது . அதில பல சுவாரசியமான விடயங்களை ஜடேஜா பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக தோனி பற்றி சுவாரசியமான விடயம் ஒன்றினை வெளியிட்டார். அதில் ஜடேஜா கூறியதாவது : அணியில் மோசமான டான்ஸர் யார் என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் தோனிதான் என்று கூறினார். அதிலும் குறிப்பாக தோனிக்கு சுத்தமாக வராத விடயம் என்றால் அது டான்ஸ் தான். இதில் அவர் மகா மட்டம் என்று குறிப்பிட்டார்.

MS-and-VK

மேலும், கோலி ஒரு ஜிம் பிரியர், ரோஹித் ஒரு காபி பிரியர் மற்றும் தவான் ஒரு செல்பி பிரியர் போன்ற பல சுவாரசியமான தகவல்களை ஜடேஜா பரிமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement