இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஐந்தாவது நாளில் முடிவடைந்தது. இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியின் முடிவில் ஒரு விக்கெட் இழந்து இருந்த தென் ஆபிரிக்க அணி இன்றைய போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கடைசியாக முத்துசாமி ஆட்டமிழக்காமல் 49 ரன்களும், பெடிட் 56 ரன்கள் அடித்தால் இந்தியாவின் வெற்றி கொஞ்சம் தள்ளி போனது என்று சொல்ல வேண்டும்.
இந்த போட்டியில் 27வது ஓவரை வீசிய ஜடேஜா போட்டியை முற்றிலும் மாற்றினார் என்று கூற வேண்டும். ஏனெனில் அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்கராம் விக்கெட்டையும், நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றியை நோக்கி அழைத்து வந்தார்.
அவர் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்று கூறவேண்டும். 25 ஓவர்கள் வீசிய ஜடேஜா 87 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி அபாரமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.