கட்டை விரல் முறிவிற்கு சர்ஜரி செய்து கொண்ட ஜடேஜா. எப்போ குணமடையும் தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. அதன் பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆஸ்திரேலிய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணிக்கு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது அந்த இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் விஹாரி மற்றும் அஷ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் போது சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜாவுக்கு மிட்செல் ஸ்டார்க் அசுரவேகத்தில் ஒரு பந்தினை வீசினார். அந்த பந்தினை தடுக்க முற்பட்ட ஜடேஜா இடது கையின் கட்டை விரலில் அடிபட்டார். இதனால் ஏற்பட்ட வலியில் மைதானத்திலேயே துடித்த ஜடேஜா சிறிது நேரத்திற்குப் பின்னர் பெயின் கில்லர் ஊசியை எடுத்துக்கொண்டு விளையாடினார். அதன் பின்னர் முதல் இன்னிங்சை முடித்துக்கொண்ட அவர் நாட் அவுட்டாக களத்தில் நின்றார்.

இந்நிலையில் அந்த இன்னிங்ஸ் முடிந்ததும் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் ஜடேஜாவின் எலும்பு கட்டைவிரல் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிதளவு விலகல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியாது என்று கூறியிருந்தாலும் போட்டியை டிரா செய்ய வேண்டுமென கிளவுஸ் அணிந்து கொண்டு தான் விளையாட தயாராக இருந்தார். அவரின் இந்த அர்ப்பணிப்பு செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த எலும்பு விலகலுக்கு சர்ஜரி செய்து கொண்டுள்ளார். ஜடேஜா இந்த சர்ஜரிக்கு பின்னர் தற்போது கையில் கட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த காயம் அவருக்கு சரியாக ஆறு வாரம் ஆகும் என்பதனால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement