நம்பமுடியாத அளவிற்கு கேட்ச் பிடித்து நியூசி அணி வீரரை மிரளவைத்த ஜடேஜா – வைரலாகும் வீடியோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது க்ரிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 542 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று விளையாடிய அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி நேரத்தில் ஜேமிசன் மற்றும் வாக்னர் ஆகியோர் இந்திய அணிக்கு சோதனை கொடுத்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்த போது முகமது ஷமி வீசிய பந்தில் வாக்னர் தூக்கி அடித்தார்.

வானில் பறந்த பந்து நிச்சயம் பவுண்டரிக்கு செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் கவர் திசையில் பீல்டிங் செய்த ஜடேஜ அதனை அசாத்தியமாக எதிரி ஒற்றைக் கையினால் பிடித்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தக் கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அற்புதமான கேட்சை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement