ஜடேஜா ரன் அவுட்டில் ஏற்பட்ட சர்ச்சை. கொதித்தெழுந்த கோலி – விவரம் இதோ

Jadeja

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

Pant 2

இந்நிலையில் இந்த போட்டியில் ஜடேஜா ரன்அவுட் ஆன விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய இன்னிங்சின் 48 ஆவது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரரான கீமோ பால் வீசினார். ஓவரில் பந்தை அடித்த ஜடேஜா விரைவான ஒரு சிங்கிள் எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர் முனையிலிருந்து ஸ்டம்பை நோக்கி அடிக்கப்பட்ட த்ரோ நேராக ஸ்டம்பில் பட்டது.

அப்போது ரீபிளேவில் ஜடேஜா கிரீசுக்குள் உள்ளே இருப்பது போன்று தெரிந்தது அதில் சந்தேகமில்லை. ஆனால் களத்தில் உள்ள ஷான் ஜார்ஜ் என்கிற நடுவர் அவுட் கொடுத்து இருக்க வேண்டும் இல்லையெனில் வழக்கம்போல் மூன்றாவது அவரை அழைத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் பெரிய திரையில் பார்த்த பின்னரே மூன்றாவது அம்பயரை அழைத்தார்.

இதனை கண்டு இந்திய கேப்டன் கோலி பெவிலியனில் இருந்து தனது அதிருப்தியை அவரது செயல்கள் மூலம் தெரிவித்தார். அதன் பின்னர் அதனை சோதித்து பார்த்த மூன்றாவது அம்பயர் ஜடேஜாவை அவுட் என்று உறுதி செய்து வெளியே அனுப்பிய விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -