உலகின் தலைசிறந்த பீல்டராக நான் திகழ இதுவே காரணம். சக்ஸஸ்க்கான மந்திரத்தை கூறிய – ரவீந்திர ஜடேஜா

Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா, அதே அளவிற்கான திறமையை தன்னுடைய பீல்டீங்கிலும் வெளிக்காட்டி, உலகிலேயே தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவருடைய ஃபீல்டிங் திறமையை பார்க்கும் பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் அவரை பலமுறை பாராட்டி புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். இப்படி உலகிலேயே ஒரு தலைசிறந்த பீல்டராகா உருவாகியிருக்கும் அவர், அதற்காக எந்த மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை தற்போது தெரிவித்துள்ளார். அது குறித்து பேட்டியளித்துள்ள அவர்,

Jadeja

- Advertisement -

போட்டிகளுக்கு முந்தைய பயிற்சிகளின் போது எனக்கு அதிவேகமான கேட்சுகளை கொடுக்க வேண்டாம் என்று பீல்டிங் பயிற்சியாளரிடம் கூறுவேன். மேலும் பயிற்சியின் போது வேகம் குறைவான கேட்சுகளை நான் பிடித்தாலும், போட்டியின் போது அதனை சரி செய்து கொள்வேன் என்று கூறிய அவர், இதற்கு முன்னராக பயிற்சியின்போது அதிக வேகமான கேட்சுகளை பிடித்து பல முறை விரல்கள் காயமடைந்ததால், போட்டியின்போது வரும் கேட்சுகளை பிடிக்க சிரமப்பட்டிருக்கிறேன். இதனால்தான் இதுபோன்ற யுக்தியைக் கையாள்கிறேன்.

போட்டியின்போது காயமடைந்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் பயிற்சியின்போதே காயமடைந்து, அதனால் போட்டிக்கு வெளியே அமருவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், எனக்கு பீல்டிங் செய்வது இயற்கையாகவே அமைந்த ஒரு திறமை என்றுதான் நான் கருதுகிறேன். ஆனாலும் அதற்கு என்னுடைய தோள்பட்டை வலுவானதாக இருக்க வேண்டும். எனவே அதற்கான பயிற்சிகளை நான் மேற்கொள்கிறேன்.

Jadeja 1

என்னுடைய தோள்பட்டை எத்தனை ஆண்டுகளுக்கு வலிமையாக இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கூறிய அவர், சமூக வலைத்தளங்களில் என்னுடைய பயிற்சி வீடியோக்களை வெளியிட நான் விரும்பவில்லை என்றும் கூறினார். அதற்கு மாறாக யாருக்கும் அவ்வளவாக தெரியாத குதிரை சவாரிகளைப் பற்றிய வீடியோக்களை பதிவிடுவதையே அதிகம் விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஃபீல்டிங்கில் சில நேரங்களில் தவறு செய்வது குறித்துப் பேசிய அவர்,

Jadeja 2

சில நேரங்களில் நான் ஃபீல்டிங்கில் தவறு செய்துள்ளேன். குறிப்பாக கேட்சுகளை மிஸ் செய்திருக்கிறேன். ஆனால் அதற்காக இதுவரை யாரும் என்னை விமர்ச்சித்தது இல்லை. ஃபீல்டிங்கிற்காக நான் எவ்வளவு பயிற்சி பெறுகிறேன் என்பதை அவர்கள் பார்க்காமல் இருக்கலாம் ஆனால், அதைப் பற்றி நிச்சயாமாக அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement