நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தகுதி பெற்றாலும் பல்வேறு சர்ச்சைகள் இந்திய அணியை சுற்றி வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தி வீரர்களின் காயம், தோனியின் ஆமைவேக பேட்டிங் மற்றும் மாற்று வீரர்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஜடேஜா குறித்து ஒரு கருத்தினை கூறினார். அதில் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது : ஜடேஜா ஆல்-ரவுண்டராக இருந்தபோதும் மாற்று வீரர் ஆகவே இந்திய அணியில் விளையாடி வருகிறார். இவருக்கு வாய்ப்பு வழங்குவதை விட வேறு ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை தேர்வு செய்வது தான் சிறந்தது என்று குறிப்பிட்டார்.
Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.@sanjaymanjrekar
— Ravindrasinh jadeja (@imjadeja) July 3, 2019
அதற்கு தற்போது ஜடேஜா அளித்துள்ள பதிலில் கூறியதாவது : நீங்கள் விளையாடியதை விட இரண்டு மடங்கு நான் விளையாடி உள்ளேன். மேலும் இன்னும் அணிக்காக விளையாடி கொண்டு உள்ளேன். அவர் அவர் சாதனைகளுக்கு ஏற்ற மாதிரி மதிப்புடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நேரடியாக மஞ்சரேக்கரை தாக்கி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.