ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.
அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது ஏன்? :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி காபா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு மித வேகப்பந்து வீச்சாளரான நிதீஷ்குமார் ரெட்டியுடன் களமிறங்கிய இந்திய அணி சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை இணைத்து விளையாடி இருந்தது.
அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியின் போது வேகப்பந்துவீச்சு கூட்டணி அப்படியே தக்க வைக்கப்பட்டு ஒரே ஒரு மாற்றமாக பந்துவீச்சு துறையில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சு துறையில் ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக ஆகாஷ் தீப்பும், சுழற்பந்துவீச்சு துறையில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படி மூன்று டெஸ்ட் போட்டியிலும் மூன்று வெவ்வேறு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த என்ன காரணம்? என்றும் இரண்டாவது போட்டியில் விளையாடிய அஸ்வின் நீக்கப்பட்டு மூன்றாவது போட்டியில் ஜடேஜா விளையாடுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் போட்டி நடைபெறும் இந்த காபா மைதானம் முற்றிலுமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசமாட்டார்கள் என்றும் அப்படியே வீசினாலும் ரன்களை கட்டுப்படுத்தும் வீரர்களாக தான் இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 3 ஆவது போட்டி டிராவானால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா? – விவரம் இதோ
இதன் காரணமாக ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்து வீசும் ஜடேஜா அதற்கு சரியாக இருப்பார் என்றும் அவர் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் அஸ்வினை விட மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதனாலே அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார் என்று தெரிகிறது.



