இந்திய அணிக்காக எதையும் செய்ய துணிந்த ரவீந்திர ஜடேஜா – போட்டியின் போது இதை கவனிச்சீங்களா ?

Jadeja
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்ததன் மூலம் தொடரில் சமநிலையில் உள்ளது. ஐந்தாம் நாள் ஆட்டத்திற்கு முன்னர் இந்திய அணி எளிதில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று விடும் என்று பலரும் கூறிய நிலையில் இன்று முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒருநாள் முழுக்க களத்தில் நின்று 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து. அதிலும் குறிப்பாக விஹாரிமற்றும் அஸ்வின் ஆகியோர் கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் தளத்தில் நின்று இந்திய அணிக்கு டிராவை தேடித் தந்தனர்.

ashwin 1

- Advertisement -

இவர்கள் இருவரின் ஆட்டம் பெரிதளவு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் கூடவே ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டமும், ஜடேஜாவின் பங்களிப்பும் அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாத ஜடேஜாவை ஏன் ரசிகர்கள் பாராட்டுகின்றனர் என்றால் முதல் இன்னிங்சில் போது சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் 28 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய பந்து அவரது இடது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் இந்திய அணிக்கு ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக அவர் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு முதல் இன்னிங்சில் முழுவதும் பேட் செய்தார். இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் போது பந்துவீச வராத ஜடேஜா மீதமுள்ள டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

jadeja 1

எனவே இரண்டாவது இன்னிங்சின் போதும் பேட்டிங் செய்யமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் இந்திய அணி கடைசி நாளில் 10 வீரர்களை மட்டுமே வைத்து விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இன்று ஜடேஜா மைதானத்தில் தனது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு பொருட்படுத்தாமல் அதில் பேண்டை சுற்றிக் கொண்டு பேட்டிங் செய்ய தயாராக இருந்தார். மேலும் புஜாரா ஆட்டமிழந்து வெளியேறியதும் விகாரி உடன் இணைந்த அஸ்வின் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

jadeja 1

அப்போது மேலும் ஒரு விக்கெட் விழுந்தால் தான் பேட்டிங் இருங்க தயார் என்ற நிலையில் கிளவுஸ் அணிந்து உட்கார்ந்திருந்தார். ஜடேஜாவின் இந்த அர்ப்பணிப்பை கண்ட கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என ஜடேஜாவின் இந்த அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர். மேலும் உண்மையிலேயே இந்திய அணியில் ஒரு முழுமையான ஆட்டக்காரர் இவர்தான் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். ஜடேஜா பௌலிங், பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்-இலும் அசத்தும் கில்லாடி என்பது நாம் அறிந்ததே.

Advertisement