ஷர்துல் தாகூர் பேட்டிங் செய்ய வந்தபோது நான் கூறியது இதுதான் – ஜடேஜா ஓபன் டாக்

Jadeja 2

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கட்டாக்கில் நேற்று நடைபெற்ற இந்த கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிக்க 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Jadeja 1

துவக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு சேசிங் மாஸ்டர் கோலி வந்ததும் சிறப்பாக விளையாட துவங்கினார். ஒரு கட்டத்தில் ராகுல் ஆட்டமிழந்து வெளியேற கோலி ஒரு முனையில் சிறப்பாக ஆடி வந்தார். அதன்பிறகு ஐயர், பண்ட், ஜாதவ் என அடுத்தடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேற கோலி தொடச்சியாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கோலி வழக்கம்போல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட போது கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ஜடேஜா களத்தில் இருந்ததால் இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தாலும் 4 ஓவர்களில் 30 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழல் நிலவியது. அப்போது களத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூள் இறங்கி 6 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Jadeja

இந்த போட்டி முடிந்து ஷர்துல் தாகூர் குறித்து பேசிய ஜடேஜா கூறியதாவது : ஷர்துல் களம் இறங்கி வந்தபோது நான் அவரிடம் சென்று ஆடுகளம் நன்றாக இருக்கிறது. பந்து அருமையாக பேட்டுக்கு வருகிறது. எனவே ஷாட் தேர்வுகளில் கவனமாக இரு தேவையில்லாமல் அடித்து ஆட வேண்டாம். பந்தை சரியாக டைமிங் செய்தாலே போதும் என்று கூறினேன். அவரும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார் என்று ஜடேஜா அவரை பாராட்டிப் பேசினார்.

- Advertisement -