மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் உலகக்கோப்பை நாயகன் ஜடேஜா இடம்பெறுவதில் சிக்கல் – இந்த இருவர் தான் காரணமாம்

Jadeja
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டி20 அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா பெயரும் இடம்பெற்றது.

Jadeja 1

- Advertisement -

இந்த தொடரின் டி20 உத்தேச அணியில் ஜடேஜா இருந்தாலும், விளையாடும் லெவனில் அவர் இறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அதன்காரணமாக தற்போது மீண்டும் 3 வடிவ இந்திய அணியிலும் இடம் பெற்றார்.

இந்நிலையில் டி20 போட்டிகளில் ஜடேஜா இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணம் யாதெனில் ஜடேஜா சீனியர் வீரராவார். வரும் 2020 டி20 உலக கோப்பை போட்டிகளை கணக்கில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதால் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள க்ருனால் பாண்டியா ராகுல் சாகர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு சுழற்சி முறையில் டி20 தொடரில் வாய்ப்பளிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

Krunal

sundar

அதனால் ஜடேஜா உத்தேச அணியில் இருந்தாலும் விளையாடும் போட்டிகளில் ஆடும் லெவனில் இறங்குவது சற்று கடினமே. ஆனால் ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

Advertisement