ஆஸி தொடர் மட்டுமின்றி அடுத்த முக்கியமான தொடரிலும் இவரால் விளையாட முடியாதாம் – ரசிகர்கள் வருத்தம்

Jadeja-3
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது. இதன் பின் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது.

indvsaus

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முதல் கபா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரை கைபற்றும் என்பதனால் இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது.

ஜடேஜா முதல் இன்னிஸ்சில் பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுனசர் பந்து இவரது பெருவிரலில் காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜடேஜா இரண்டாவது இன்னிஸ்சில் பந்து வீசவில்லை. இருந்தாலும் ஜடேஜா பெயின் கில்லரை போட்டுக்கொண்டு இரண்டாவது இன்னிஸ்சில் பேட்டிங் செய்ய தயாராக இருந்தார். ஆனால் ஜடேவுக்கு அப்போது பேட்டிங் செய்யும் நிலை வரவில்லை.

jadeja 1

இதன்பிறகு ஜடேஜாவுக்கு காயத்தை சரி செய்யும் வகையில் சர்ஜெரி ஒன்று செய்யப்பட்டது. இதனால் ஜடேஜா அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜடேஜா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் . இதையாடுத்த இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் வரும் பிப்.5 முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்திய ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

Jadeja-2

இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தும் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது கடினம் என்றும், ஜடேஜாவிற்கு பதிலாக யாரை சேர்த்தாலும் அவர் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement