இன்றைய போட்டியில் ஜடேஜா நிகழ்த்திய அறிய சாதனை – நீங்க கவனிச்சீங்களா ?

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்திய அணி ஆனது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

Robinson-1

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் மற்றும் ராபின்சன் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி தங்களது முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் தற்போது இரண்டாம் நாளில் இரண்டாவது செஷன் வரை இங்கிலாந்து அணியானது 298 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஹஸீப் ஹமீது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்ட் தொடரில் வித்தியாசமான சாதனை ஒன்றினை அளித்துள்ளார்.

jadeja

அந்த சாதனையை யாதெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஸ்பின் பவுலருக்கு எந்த ஒரு விக்கெட்டும் விழவில்லை. இங்கிலாந்து அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்களும், இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளரும் விளையாடி வருவதால் முதல் 2 போட்டிகளிலும் விழுந்த 40 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே கிடைத்தன.

jadeja 1

அதனை தொடர்ந்து இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஹஸீப் ஹமீதை போல்டாக்கி வெளியேற்றினார். இந்த இதன்மூலம் இந்த தொடரில் 41 விக்கெட்டுகள் கழித்து ஸ்பின்னுக்கு முதல் விக்கெட் விழுந்துள்ளது. இதற்கு முன்னர் 1989-90 நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுக்கு பின்னர் ஸ்பின்னருக்கு முதல் விக்கெட் விழுந்தது. அதன் பிறகு தற்போது இந்த அரிய சம்பவம் 41 விக்கெட்டுக்கு பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement