டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய ஆல்ரவுண்டர் – ஐ.சி.சி வெளியிட்ட பட்டியல் இதோ

Jadeja-2
- Advertisement -

அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தொகுத்து ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தர வரிசை பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஐசிசி நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

icc

- Advertisement -

நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டிகளை கணக்கில்கொண்டு வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், லாபுஷேன், விராட் கோலி, ஜோ ரூட் ஆகிய ஆகியோர் முறையே முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றனர். அதேபோன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் அஸ்வின் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 3வது இடத்திலும் இருக்கின்றனர். சமீபத்தில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த கேஷவ் மஹாராஜ் 28 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Jadeja

அதேபோன்று ஆல்ரவுண்டர்கள் தர வரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டரை தாண்டி தற்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திற்கு சென்றுள்ளார். 386 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜடேஜா ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும், ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது இடத்திலும், ரவி அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement