வீடியோ : இலங்கை வீரரின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் “புஷ்பராஜ் ஸ்டைலில்” – கொண்டாடிய ஜடேஜா

Jadeja-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டியானது லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது.

jadeja

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி 3 போட்டிகள் அடங்கிய இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா அதன்பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான தொடரை தவற விட்டார்.

அதன் பிறகு பெரிய இடைவெளிக்கு பின்னர் தற்போது இலங்கை அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பிய அவர் இந்த போட்டியில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்று 4-வது வீரராக பேட்டிங் செய்ய களம் புகுந்த அவர் இறுதியில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த வேளையில் 3 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆனால் எப்போதுமே தான் கலக்கி வரும் பந்துவீச்சில் இன்றும் அவர் அசத்தலான பவுலிங்கை வெளிப்படுத்தினார். அதன்படி 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய விக்கெட்டாக தினேஷ் சண்டிமால் விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் போது பத்தாவது ஓவரின் 2-வது பந்தை வீசிய அவர் ஸ்டம்பிங் மூலம் சண்டிமாலை ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

அப்போது ரவீந்திர ஜடேஜா அந்த விக்கெட்டை கொண்டாடிய விதம் தான் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற புஷ்பராஜ் படத்தில் அல்லு அர்ஜுன் செய்யும் ஒரு முகபாவனை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இதையும் படிங்க : 39 வயசு ஆனா என்ன? நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன் – விடாமல் அடம்பிடிக்கும் ஜாம்பவான் வீரர்

அந்த ஸ்டைலில் தான் தற்போது ரவீந்திர ஜடேஜா சண்டிமால் விக்கெட்டை வீழ்த்தியதும் அந்த விக்கெட்டை கொண்டாடினார். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement