டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராக மாறிய ஜடேஜா – சாதனை விவரம் இதோ

jadeja 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி இன்று மூன்றாவது நாளாக நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 183 ரன்களை இங்கிலாந்து அணி குவிக்க அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

indvseng

- Advertisement -

தற்போது மூன்றாம் நாளில் இரண்டாவது செக்ஷனில் விளையாடி வரும் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியை விட தற்போது இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ராகுல் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக மிகப்பெரிய சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார்.

Jadeja

அந்த சாதனை யாதெனில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்து இருந்தபோது களமிறங்கிய ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த இன்னிங்சில் 27 ரன்களை கடந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். அதுமட்டுமின்றி ஏற்கனவே அவர் 200 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Jadeja-2

இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 200 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 21வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த சராசரியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement