ஜடேஜா வொயிட் போடலாம். ஆனா இந்த அளவுக்கு போடக்கூடாது இதெல்லாம் ஓவர் – வைரல் வீடியோ

Jadeja 3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்சில் 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்ததால் இன்னும் தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்கள் பின்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் ஜடேஜா ஒரு பந்தை வீசும்போது கைதவறி அது அந்த பந்து வைட் ஆக சென்றது. மேலும் பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்த இந்த பந்தை பார்த்து மைதானத்தில் இருந்த வீரர்களும் சிரித்தனர்.

இந்த விடயத்தை வீடியோவாக பதிவிட்ட இந்திய அணி நிர்வாகம் 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக வீசிய வீடியோவையும் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வீசிய இந்த வீடியோவையும் சேர்த்து ஜடேஜாவை செல்லமாக கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement