டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்து ஜடேஜா அசத்தல் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் முறையே 35, 34 ரன்கள் அடித்தன.ர் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக பந்துவீசிய சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Jadeja 2

இந்நிலையில் இந்தப் போட்டியில் 44 ரன்கள் குவித்ததன் மூலம் ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அதன்படி 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அவர் 44 ரன்கள் அடித்து டி 20 வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கி ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் பட்டியலில் தோனி பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை பட்டியலில் இந்திய அணி சார்பில் தோனி முதலிடத்தில் இருந்தார்.

jadeja

தோனி கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக ஏழாவது வீரராக களமிறங்கி 18 பந்துகளில் 38 ரன்களை அடித்திருந்தார். அதுவே டி20 போட்டியில் 7 ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் என்ற சாதனையாக இருந்தது. தற்போது அவரின் இந்த சாதனையை அவரது சிஷ்யரான ஜடேஜா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement