- Advertisement -
உலக கிரிக்கெட்

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தோனி ஜடேஜா கூட்டணி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை குவித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்வானார்.

இந்த உலகக் கோப்பை இந்திய அணியில் ஜடேஜா 15 பேர்களில் தேர்வாகி இருந்தாலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்றைய போட்டியில் முதன்முதலாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

அதிலும் குறிப்பாக தோனியும், ஜடேஜாவும் சேர்ந்து பல ஆண்டுகளாக ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டுகளை எடுத்து நாம் பார்த்திருப்போம். அதேபோன்று நேற்றைய போட்டியிடும் குசால் மெண்டிஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரை 3 ரன்களில் தோனியின் அபாரமாக ஸ்டம்பிங் மூலம் ரவீந்திர ஜடேஜா அவுட் ஆக்கி வெளியேறினார். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து எடுத்த விக்கெட் வீடியோவினை ரசிகர்கள் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by