இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்ததால் இன்னும் தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்கள் பின்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது யாதெனில் இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ள ஜடேஜா 198 விக்கெட்டுகளை இந்த போட்டிக்கு முன்பு வரை வீழ்த்திருந்தார்.
இன்றைய நாளில் இந்த இன்னிங்சில் அவர் வீழ்த்திய 2 விக்கெட்டுகளும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதிலும் என்ன சிறப்பம்சம் என்னவென்றால் இடது கை சுழற்பந்து வீச்சாளராக அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
37 ஓவர்கள் வீசிய ஜடேஜா 116 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை இந்த போட்டியில் வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக சதமடித்த துவக்க வீரர் எல்கரை இவரே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என சிறப்பான பார்மில் இருக்கும் ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.