இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையின் நட்சத்திரம் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியா 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். 2025 சாம்பியன்ஸ் டிராபி செமி ஃபைனலில் அரை சதமடித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மேட்ச் வின்னராக வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். குறிப்பாக 2025 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த விராட் கோலி 18 வருடங்கள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார்.
நம்ப முடியாத ஹெல்ப்:
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய போது விராட் கோலி தம்முடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு நிறைய உதவிகள் செய்ததாக இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பேத்தல் கூறியுள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்வதில் விராட் கோலி தமக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேத்தல் பேசியது பின்வருமாறு.
“ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சிறப்பாக இருந்தது. விராட் கோலி எனக்கு நம்ப முடியாத வகையில் உதவிகளைச் செய்தார். அவர் எப்படி பயிற்சி செய்கிறார் விஷயங்களை எப்படி அணுகுகிறார் என்பதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சேசிங் போன்ற விஷயங்களில் அவருடைய ஆட்டத்தை பார்ப்பது நம்ப முடியாததாக இருக்கும்”
சேஸ் மாஸ்டர்:
“அழுத்தமான நேரங்களிலும் எப்படி அவரால் எளிதாக கியரை மேலும் கீழும் மாற்றி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்க முடிகிறது என்ற விஷயங்கள் நம்ப முடியாதது” என்று கூறினார். அவர்கள் கூறுவது போல 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி இந்தியாவுக்கு நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதனாலேயே அவரை சேஸ் மாஸ்டர் என்று அனைவரும் அழைக்கிறார்கள்.
இதையும் படிங்க: 248 ரன்ஸ்.. வெ.இ அணியை ஒய்ட்வாஷ் செய்த இங்கிலாந்து.. 4 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி
அப்படிப்பட்ட அவருடன் கடந்த ஐபிஎல் தொடரில் ஜேக்கப் பேத்தல் லீக் சுற்று வரை இணைந்து விளையாடி அனுபவங்களை கற்றுக் கொண்டார். அதைப் பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ்க்கு முதல் ஒருநாள் போட்டியில் 82 ரன்கள் அடித்தார் அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் அவர் 36* (16) ரன்கள் விளாசி இங்கிலாந்தின் வெற்றியில் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.



