இந்த பிட்ச்ல எந்த பிரச்சனையும் இல்ல. நாங்க தான் இங்க எப்படி விளையாடணும்னு கத்துக்கனும் – இங்கி வீரர் வெளிப்படை

Leach
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவாக நடைபெற்றாலும் சுழற்பந்து வீச்சுக்கு அதிகளவு சாதகமாக அமைந்தது. மேலும் 2 நாட்கள் முடிவடைந்ததால் இந்தப் போட்டி குறித்தும், அகமதாபாத் பிட்ச் மோசமாக தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும் குற்றச்சாட்டு வைத்தனர்.

ind

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நாளை மார்ச் 4-ஆம் தேதி அதே மைதானத்தில் துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் இந்த மைதானம் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களும், முரண்பாடான விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த வேளையில் இந்த மைதானத்தை ஆதரித்து இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஜேக் லீச் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களை முடிவடைந்ததை விரும்பவில்லை. அதனையும் தாண்டி டெஸ்ட் போட்டி நடைபெற வேண்டும் என தான் விரும்புவேன். என்னை பொருத்தவரை பிட்ச் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இருக்கின்ற பிட்ச்சில் எப்படி விளையாடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே எனது கவனத்தில் இருக்கும்.

Leach 1

இந்தப் பிட்சில் அக்சர் படேல் மற்றும் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி எங்களை நிலைகுலையச் செய்தனர் என்பதே உண்மை என்று பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னை பொறுத்தவரை கடந்த போட்டியின் பிட்ச் குறித்து எந்தக் குறையும் இல்லை. நான் அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன், எங்கள் அணியினரும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்வியில் இருந்து வெளியே வர விரும்புகிறோம். இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். என்னை பொறுத்தவரை இந்த பிட்ச்சில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த பிட்ச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement