கோலிக்கு பதிலாக நாளைய போட்டியில் 3 ஆம் இடத்தில் இவர்தான் விளையாடப்போகிறாராம் – விவரம் இதோ

Kohli-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டெல்லி மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்ட காரணத்தால் அவர் இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்.

இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் 3 ஆம் இடத்தில் இறங்கும் வீரர் குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது இந்திய அணியின் மூன்றாவது வீரராக நாளைய போட்டியில் ஆடப்போகும் வீரர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தொடர்ந்து இந்திய அணிக்காக கிடைக்கும் சில வாய்ப்புகளில் சிறப்பாக ஆடிவரும் ஸ்ரேயாஸ் அய்யர் இன்றைய போட்டியில் கோலிக்கு பதிலாக இறங்குவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் மனிஷ் பாண்டே 5வது இடத்தில் பண்ட் இறங்க வாய்ப்பு உள்ளது.

Iyer-1

ஆனால் ஐயருக்கு போட்டியாக தற்போது மூன்றாவது இடத்தில் ஒரே ஒரு வீரர் மட்டுமே இருக்கிறார் அவர் வேறு யாருமில்லை கோலியின் செல்லப்பிள்ளையான ராகுல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -