ரோஹித்தை தொடர்ந்து நானும் இதனை செய்ய ஆசைப்பட்டேன் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

Iyer-3

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் 174 ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ராகுல் மற்றும் ஐயர் அமைத்த சிறப்பான பார்ட்னர்ஷிப் அணியின் ரன்குவிப்பிற்கு காரணாமாக அமைந்தது. பின்னர் தீபக் சாகரின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணி எளிதாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.

Iyer 1

இந்த போட்டியில் 33 பந்துகளைச் சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களை குவித்தார். மேலும் 5 சிக்சர்களை இந்த போட்டியில் அடித்து அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 15வது ஓவரில் வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளரான அபீப் ஹூசெய்ன் ஓவரில் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து சிக்சர் விளாசினார்.

மேலும் நான்காவது பந்தையும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவரால் சிங்கில் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 27 பந்துகளில் அவர் டி20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஐயர் இதுகுறித்து சுழற்பந்துவீச்சாளர் சாஹலிடம் கூறியதாவது : நான் அந்த ஓவரில் அதிரடியாக விளையாடும் எண்ணத்தோடு அந்த ஓவரை அணுகினேன்.

Iyer 2

முதல் மூன்று பந்துகளில் சிக்சர் அடித்ததும் அந்த ஓவரில் 6 பந்துகளில் சிக்சர் அடிக்க எனக்கு தோன்றியது. ஆனால் என்னால் 4 ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. எனக்கு ஏதுவாக பந்துகள் வந்திருந்தால் நிச்சயம் நான் 6 சிக்சர்களை அடித்து இருப்பேன் என்று அவர் கூறினார். இதற்கு முந்தைய போட்டியில் அதே பந்துவீச்சாளரின் ஓவரில் ரோகித் சர்மாவும் தொடர்ந்து 3 பந்துகளில் சிக்சர் இருந்தார். மேலும் அவரும் அவரது ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க ஆசைப்பட்டதாகவும் ரோஹித் கூறிருந்தார் என்பது குய்ப்பிடத்தக்கது.

- Advertisement -