என்னதான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டும் சிறப்பாக இருந்தாலும் இவரின் உத்வேகமே அணிக்கு வெற்றி பெற்று தந்தது – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Iyer
- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அதிரடியால் சற்று ஆட்டம் கண்டது என்றே கூறலாம். அதன்பின் இடைவெளியில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு அதை காண முடிந்தது. அதன் பின்னர் இந்திய வீரர்கள் எழுச்சி கொண்டு சிறப்பாக பவுலிங்கில் மிரட்ட இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Chahar-1

இந்நிலையில் தற்போது இந்த போட்டி குறித்த நேற்றைய போட்டி திட்டம் குறித்து தகவல் ஒன்றை ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். அதன்படி துவக்கத்தில் இரு விக்கெட்டுகளை பங்களாதேஷ் அணி இழந்து விட்டதால் நாங்கள் சற்று இயல்பாக விளையாடினோம். ஆனால் அவர்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் நிலைமையை அவர்களின் பக்கம் கொண்டுசென்ற போது எங்களுக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.

- Advertisement -

அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணி வீரர்களை ஒன்றாக அழைத்து இடைவெளியின் போது ஆலோசனை செய்தார். அப்போது ஆட்டம் இனிமேல் நம் கைகளை விட்டு செல்லக் கூடாது நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இந்த தொடர் வெற்றி பெற்றாக வேண்டும் மேலும் நம்மால் அவர்களை வீழ்த்த முடியும் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியே உத்வேகத்தை கொடுத்தார்.

அவரின் வார்த்தைகளை மீண்டும் எங்களை சிறப்பாக செயல்பட வைத்தது. பேட்டிங்கில் ராகுலும் நானும் ரன்களை அடித்து இருந்தாலும் பந்துவீசும் போது ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை ஒரு கேப்டனாக அணிக்கு ஊக்கம் கொடுத்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வெற்றிக்கு அழைத்துச் சென்றது ரோஹித்தான் என்று ஐயர் பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement