நான் இன்று 4 ஆவது இடத்தில் சிறப்பாக விளையாட இவர் அளித்த ஊக்கம் தான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Iyer

இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்த மிகப்பெரிய பிரச்சினை யாதெனில் இந்திய அணியில் களமிறங்கும் 4 ஆவது வீரர் இடம் தான். கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அணி அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், மனிஷ் பாண்டே மற்றும் பண்ட் என பல்வேறு வீரர்களை பரிசோதித்தது. ஆனால் யாரும் அந்த இடத்தை சரியாக பயன்படுத்தி விளையாடவில்லை.

Iyer

மேலும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி கண்டபோது நான்காவது இடம் அதிகளவு சர்ச்சைக்கு உள்ளானது. அதன் பிறகு அணியில் 4 ஆவது வீரராக சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டு வகை போட்டிகளிலும் நான்காவது இடத்தில் ஆடிவரும் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வருகிறார்.

நான்காவது இடத்தில் இறங்கி சூழலுக்கேற்ற தனது அபாரமான ஆட்டத்தை சிறப்பாக கட்டமைத்து வருகிறார் ஐயர். ஏனெனில் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தக்க வைத்து பொறுமையாக ஆடும் தன்மையும், தேவையானபோது அதிரடியாக வெடித்து சிதறும் தன்மையும் அவரிடம் உள்ளது. மேலும் தொடர்ந்து இந்தியாவின் நான்காவது வீரராக விளையாட அனைத்து திறனும் தகுதியும் உடையவராக திகழ்கிறார்.

Iyer

இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். தற்போது தான் சிறப்பாக விளையாட காரணம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் ஒரு சிறந்த வீரராக உருவானதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தான். ஏனெனில் ஐபிஎல் தொடரின்போது நான் கேப்டனாக டெல்லி அணிக்கு செயல்பட்டேன்.

- Advertisement -

iyer

அப்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் என்னை ஊக்குவித்தார். அவர் ஒரு பாசிட்டிவான மனிதர் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து வீரர்களிடம் ஒரே மாதிரியாக பழகுவார். அவரின் ஊக்குவிப்பும், பயிற்சியுமே என் திறமையை வளர்த்து என்னை சிறப்பாக விளையாட வைத்தது என்று ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது குறிப்பிடத்தக்கது.