இன்னைக்கும் சூரியகுமார் யாதவுக்கு இடம் கிடையாது. அவரோட ஆட்டத்தால் இவரோட வாய்ப்பு போச்சு – விவரம் இதோ

SKY

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

indvseng

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணியின் தவறான தேர்வினால் தான் தோல்வி கிடைத்தது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் மட்டுமே இருக்கும் என்று மட்டுமே கூறப்படுகிறது.

அந்த வகையில் அக்சர் படேல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சைனி இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதைத் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இடம் பெற்றிருக்கும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

Iyer

மேலும் இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றாலும் ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் மட்டும்தான் சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் முதல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் யாருமே ரன்கள் குவிக்காத நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் அபாரமாக விளையாடி 67 ரன்களை குவித்துள்ளார். அதனால் இன்றைய போட்டியிலும் ஸ்ரேயாஸ் நிச்சயம் அணியில் இடம் பெறுவதால் சூரியகுமாரின் யாதவின் இடம் பறிபோயுள்ளது.

- Advertisement -

shreyas

மேலும் இந்த தொடர் முழுவதுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? என்பதில் சந்தேகமே நிலவுகிறது. அதேவேளையில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக களம் ஏதாவது ஒரு போட்டியில் இஷான் கிஷன் விளையாட வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது