இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.
Angry Virat ???????????? #IndvsSA #INDvSA #ViratKohli pic.twitter.com/jV5EUqQEJ1
— Harshal Gadakh ???????? (@harshalgadakh7) September 18, 2019
நேற்றைய போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் அடித்த பந்தை இந்திய அணியின் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி எல்லைக்கு அருகே சற்று மந்தமான முறையில் பீல்டிங் செய்தார். அப்பொழுது ஒரு ரன் ஓடவேண்டிய அவர்கள் இரண்டு ரன்கள் ஓடியதால் ஐயரின் மீது கோலிக்கு கோபம் ஏற்பட்டது. உடனே அதை அவர் தனது ஆக்ரோஷமான செயல்பாட்டின் மீது மூலமாக அதனை காண்பித்தார்.
பந்தினை எடுத்து தாமதமாக ஐயர் வீசியதால் கோலி அந்த பந்தினை ஸ்டம்ப் அருகே பிடித்து அப்படியே ஸ்டம்பை தகர்த்தார். பேட்ஸ்மேன் கிரீசுக்குள் வந்தும் கோலி இவ்வாறு கோபமாக ஸ்டம்பை தகர்த்தது தற்போது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.