இந்தியா ஜெயிக்க அதிர்ஷ்டம் தான் காரணம். நேற்றைய போட்டியில் இதனை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

- Advertisement -

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது என்று கூறலாம்.

Chahar

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிர்ஷ்டம் ஒரு காரணமாக அமைந்தது. அது எப்படி என்று கேட்கிறீர்களா ? ஆம் அதிர்ஷ்டமும் ஒரு காரணம்தான் ஏனெனில் இந்திய அணி தொடக்க வீரரான ரோகித் சர்மாவை 3 ரன்களிலும், 35 ரன்களில் இருக்கும்பொழுது தவானும் அவுட் ஆனார்கள்.

5.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது அதற்கு அடுத்து அதே ஓவரில் தனது இரண்டாவது பந்தை சந்தித்த ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் எளிதாக கைக்கு கொடுத்த கேட்ச் ஒன்றை பங்களாதேஷ் வீரர் அமினுல் தவறவிட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஐயர் 33 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 62 ரன்களை குவித்து இந்திய அணியின் ரன் குறிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.

Iyer

ஒருவேளை ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியிருந்தால் பவர்பிளே ஓவர்களுக்குள் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி இருந்திருக்கும். ஆனால் ஐயரின் கேட்ச் விட்டதன் மூலம் வந்த அதிர்ஷ்டம் காரணமாக நேற்றைய போட்டியில் இந்திய பெரிய இலக்கை நிர்ணயித்தது. ஐயர் மட்டும் டக் அவுட் ஆகி இருந்தால் போட்டி நம் கையிலிருந்து இழந்திருக்கவும் வாய்ப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement