ஹெட்மயரை குறிவைத்து பழிவாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் – 2 ஆவது போட்டியில் இதை கவனிச்சீங்களா ?

hetmyer-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Iyer

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் 139 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹெட்மையர் கொடுத்த கேட்சை அந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தவற விட்டதால் அதன் காரணமாக அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஹெட்மயரை ஒரு ரன்அவுட் வாய்ப்பின் மூலம் பழிதீர்த்து கொண்டார்.

13 வது ஓவரில் ஜடேஜா ஹெட்மயர் பந்தை பவுண்டரிக்கு அடிக்க முயன்றபோது அந்தப்பந்தை வேகமாக ஓடி ஸ்ரேயாஸ் ஐயர் அதை அபாரமாக பவுண்டரி லைனுக்கு முன்னர் தடுத்தார். தடுத்தது மட்டுமின்றி தனது மின்னல் வேக த்ரோ மூலம் ஹெட்மையரை ரன் அவுட் ஆக்கினார். இதன்மூலம் 4 ரன்களில் பரிதாபமாக ஹெட்மயர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

முதல் போட்டியில் தான் தவறவிட்ட வாய்ப்பை பயன்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஹெட்மயரை குறிவைத்து இரண்டாவது போட்டியில் ரன்அவுட் மூலம் பழி தீர்த்துக் கொண்டார். ஒருவேளை இந்த ரன்அவுட் இல்லாமல் இருந்திருந்தால் ஹெட்மயர் போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கக்கூட வாய்ப்பிருந்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.