ரோஹித், கோலி ஆட்டமிழந்தால் என்ன ? நான் இருக்கிறேன் தனது இடத்தை நியாப்படுத்திய இளம்வீரர் – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு. செய்தது அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து முடித்தது.

Cup

- Advertisement -

அப்படி முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்களில் வெளியேற ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஆவது பெரியபாட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பந்துகளில் 4 ரன்கள் அடித்த நிலையில் கோலி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் உடன் கை கோர்த்தது ரோகித் ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டாலும் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் அவுட்டாகி வெளியேற அடுத்து இளம் வீரரான பண்ட் களமிறங்கினார். வந்ததிலிருந்து இருவரும் சிறப்பாக விளையாட துவங்கிய இவர்கள் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் 88 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெளியேற பண்ட் தற்போது ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

Iyer

இந்தப் போட்டியில் முக்கிய கட்டத்தில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அவ்வளவுதான் இன்றைய போட்டியில் குறைந்த ரன்களே அடிக்கும் என்று ரசிகர்கள் முடிவுக்கு வந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 4-ஆவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். 194 ரன்கள் இருந்தபோது ஐயர் 70 ரன்னில் அவுட்டாக பண்ட் சிறப்பான ஆட்டத்தை விளையாடி ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

Pant 2

மேலும் பண்ட் மற்றும் ஐயரின் ஆட்டம் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. அதுவும் குறிப்பாக கடந்த பல தொடர்களாகவே நான்காவது இடம் குறித்த கேள்வி எழுந்து வந்த நிலையில் அந்த இடத்தில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐயர் இந்த போட்டியிடும் தான் நான்காவது இடத்திற்கு சரியான வீரர் என்பதை நிரூபித்து 70 ரன்களை முக்கியமான நேரத்தில் குவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்தது. மேலும் இவரை நான்காவது இடத்தில் தக்கவைக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement