ஐயர் மற்றும் ஷிவம் துபேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள நிர்வாகம் – விவரம் இதோ

Iyer

ரஞ்சி டிராபி போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான தொடரில் பல முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, சர்வீஸஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் திணறியது. முதல் இன்னிங்சில் 114 ரன்களுடன் 2-வது இன்னிங்சில் 198 ரன்கள் என மும்பை அணி எளிதில் சுருண்டது.

Iyer-3

இந்த இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 46 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததால் சர்வீசஸ் அணி விக்கெட் எதுவும் இழக்காமல் எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியை மும்பை அணியின் முன்னாள் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த ஐயர் மற்றும் துபே ஆகியோர் இருவரும் ஓய்வில் இருந்தும் இந்த போட்டியில் ஆடவில்லை.

அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய பின்னர் இப்போது ஓய்வில் இருக்கிறார். அடுத்து வரும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னர் இரண்டு வாரம் ஓய்வு இருந்தும் இந்த போட்டியை அவர்கள் நிராகரித்து உள்ளது தற்போது கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது குறித்து பதிலளித்த மும்பை கிரிக்கெட் வாரியம் மும்பை கிரிக்கெட் இருக்கு இந்த தோல்வி துரதிஷ்டவசமானது.

Dube

இந்த போட்டிக்கு பின்னர் நாங்கள் அவர் அவர்கள் இருவரிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ எங்களை ஓய்வு எடுக்கச் சொல்லி உள்ளது என்று அவர்கள் இருவரும் கூறினார்கள். எனினும் நாங்கள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அவர்களுடன் பேசி அவர்கள் கூறியதை பற்றி உறுதி செய்த போது அது போன்ற எந்த தகவலையும் பி.சி.சி.ஐ தெரிவிக்கவில்லை என்று தெரியவந்தது.

- Advertisement -

Iyer

தற்போது அவர்களை ஓய்வெடுக்கச் சொன்னது யார் என்றும் அவர்கள் ஏன் இப்படி பேசினார்கள் மற்றும் ரஞ்சி போட்டியை தவிர்க்க என்ன காரணம் என்றும் தற்போது கேள்வி எழுந்துள்ளது. எனவே துபே மற்றும் ஐயர் ஆகியோரின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.