முழுமையான ஆதரவு இருந்தும் தனிமையாக உணர்கிறேன் – விமர்சனங்களால் விராட் கோலி வேதனையுடன் கூறியது என்ன

Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது அபார செயல்பாடுகளால் பெற்ற புகழுக்கு ஈடான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்துள்ள அவர் ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். அதிலும் 31 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த 3வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்த அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Virat-Kohli

- Advertisement -

ஆனால் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை கடந்த 2019க்குப்பின் அடுத்த சதத்தை அடிக்க முடியாத அளவுக்கு அவரின் பிரம்மாண்ட கேரியரில் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பொறுப்புகளைப் படிப்படியாக ராஜினாமா செய்து சுதந்திரப் பறவையாக விளையாடத் துவங்கிய அவரால் பழைய பார்முக்கு திரும்பி சதமடிக்க முடியவில்லை. அதனால் காத்திருந்து காத்திருந்து கடுப்பான கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் எத்தனை நாட்கள் பெரிய பெயருக்கேற்றார் போல் சிறப்பாக செயல்படாமல் அணியில் விளையாடுவீர்கள் என்று வெளிப்படையான விமர்சனத்தை வைத்துள்ளனர்.

பணிச்சுமை பிரச்சனை:
மேலும் இத்தனை வருடங்களாக ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு அவரின் முகத்திலும் ஆட்டத்திலும் தெரிந்ததால் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து உடனடியாக வெளியேறி சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் தொடர்ந்து விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்து விளையாடிய அவர் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எட்டாமல் சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு விட்டு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுக்கிறார்.

kohli

அதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இருப்பினும் இங்கு ஜாம்பவான்கள் என்ற பெயருடைய நிறைய முன்னாள் வீரர்கள் 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுக்கின்றனர். இந்நிலையில் இவ்வளவு ஆதரவுகள் இருந்தும் நிறைய தருணங்களில் ஆதரவற்ற மனிதராக தனிமையை உணர்வதாக விராட் கோலி கூறியுள்ளார்.

- Advertisement -

வேதனையில் விராட்:
பணிச்சுமையால் சுமாராக செயல்படும் நிலையில் விமர்சனங்களையும் சந்திப்பது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது பின்வருமாறு. “ஒரு விளையாட்டு வீரரிடம் இந்த விளையாட்டு அவருடைய சிறந்தவற்றை வெளிக்கொண்டு வரும். ஆனால் அதே சமயம் அதனால் ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தம் உங்களிடம் மனதளவில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது நிச்சயமாக ஒரு தீவிரமான பிரச்சனையாகும். மேலும் இதிலிருந்து விளையாட்டு வீரர்களாக நாங்கள் எல்லா நேரங்களிலும் வலுவாக இருக்க முயற்சிக்கும் போது அது உங்களை பிரித்தாள்கிறது”

kohli

“எனவே ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கான எனது ஆலோசனை என்னவெனில் உடல்தகுதி மற்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதில் கவனம் செலுத்துவது முக்கியமாகும். அதேசமயம் உங்களுடைய உள் உணர்வுகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் அவசியமானதாகும். இதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். குறிப்பாக ஒரு அறை முழுவதும் என் மீது அன்பும் ஆதரவும் காட்டும் நபர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பதாக நிறைய தருணங்களில் உணர்ந்துள்ளேன். இந்த உணர்வை நிறைய விளையாட்டு வீரர்களை அனுபவித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“எனவே உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உங்கள் மீதான முக்கிய சுயத்துடன் மீண்டும் இணையுங்கள். அதை நீங்கள் செய்யாவிட்டால் உங்களைச் சுற்றிய மற்ற விஷயங்கள் நொறுங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. உங்கள் வேலைக்கு மத்தியில் சமநிலையில் இருக்கும் வகையில் உங்களது நேரத்தை எவ்வாறு பிரிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்ய உங்களது வாழ்வின் மற்ற முயற்சிகளை போல் அல்லாமல் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். இருப்பினும் உங்கள் வேலையை செய்யும்போது நல்லறிவு மற்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு இதுவே வழியாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்த விராட் கோலி விமர்சனங்களை உடைத்து டி20 உலக கோப்பையில் இடம்பிடிக்க விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படும் முயற்சியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement