IND vs ENG : மெக்கல்லமின் அதிரடி பாதை இங்கிலாந்துக்கு ஆபத்தானதாக இருக்கலாம் – எச்சரிக்கும் இந்திய வீரர்

Brendon Mcuullam Ben Stokes
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் முதலாவதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து மிரட்டியது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையிலான இந்தியாவிடம் சரணடைந்தது உட்பட கடந்த 2017இல் முதல் ஜோ ரூட் தலைமையில் பெரும்பாலான போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்த அந்நாட்டு வாரியம் முதலில் ஜோ ரூட்டை கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வைத்து நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சை புதிய கேப்டனாக நியமித்தது.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

அவருக்கு உறுதுணையாக அவரைப் போலவே அதிரடியை மட்டும் விரும்பக்கூடிய நியூசிலாந்தின் ஜாம்பவான் பிரெண்டன் மெக்கல்லமை தலைமை பயிற்சியாளராகவும் நியமித்தது. அவர்களது தலைமையில் சொந்த மண்ணில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் கடைசி இன்னிங்சில் 250க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை அசால்டாக சேசிங் செய்து 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்ற இங்கிலாந்து ஒரே தொடரில் வலுவான முரட்டுத்தனமான அணியாக மாறியது.

அதிரடி இங்கிலாந்து:
அதன் ஒரு பகுதியாகவே பர்மிங்காமில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் 3 நாட்களில் அட்டகாசமாக செயல்பட்டு இந்தியா நிர்ணயித்த 378 ரன்கள் இலக்கை அசால்டாக சேசிங் செய்த அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து மிரட்டியது. இப்படி ஒரே மாதத்தில் முரட்டுத்தனமான அணியாக மாறுவதற்கு ப்ரெண்டன் மெக்கல்லமின் அதிரடியான அணுகுமுறையும் பயிற்சியுமே காரணம் என்று அனைவரும் பாராட்டினார்கள். மேலும் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதையே மாற்றி எழுதப் போகிறோம் என்றும் இங்கிலாந்து உலகை எச்சரித்தது.

Ben Stokes Jasprit Bumrah ENG vs IND

ஆனால் சொந்த மண்ணில் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத இந்தியாவுக்கு எதிராக தொடரை சமன் செய்து விட்டு என்னமோ வெளிநாட்டு மண்ணில் உலக கோப்பையை வென்றது போல் இப்படிப் பேசுகிறார்களே என்று நிறைய ரசிகர்கள் புதிய இங்கிலாந்தை விமர்சித்தனர். மேலும் பேட்டிங்கில் சாதகமற்ற வெளிநாட்டு பிட்ச்களிலுக்கு அவர்களால் இதையே சாதித்துக் காட்ட முடியுமா என்ற சவாலையும் நிறைய பேர் முன்வைத்தனர்.

- Advertisement -

சொதப்பும் இங்கிலாந்து:
அந்த நிலைமையில் கேப்டன் ரோகித் சர்மா வந்ததும் நடைபெற்ற டி20 தொடரில் கிட்டத்தட்ட அதே வீரர்களுடன் அதே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து 2 – 1 (3) என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. அதைவிட ஓவல் மைதானத்தில் துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் வெறும் 110 ரன்களுக்கு சுருண்டு வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனால் “பஸ்பால்” என்றழைக்கப்படும் ப்ரெண்டன் மெக்கல்லமின் அதிரடி பாதை அனைத்து நேரங்களிலும் செயல்படாது என்பதும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விவேகமும் வேகமும் சேர்ந்த பாதை தான் தொடர் வெற்றிகளை பரிசளிக்கும் என்பதும் நிரூபணமானது.

Mccullum-and-Shreyas

இந்நிலையில் மெக்கல்லம் காட்டும் அதிரடி பாதை வெற்றியை விட அதிகமான ஆபத்தை கொடுப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நட்சத்திர இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இதுபற்றி இங்கிலாந்தின் பிரபல டெலிகிராப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அது பார்ப்பதற்கு அபாரமாக உள்ளது. ஆனால் ஒரு பவுலராக இந்த போட்டி எதை நோக்கி நகர்கிறது என்பதை நினைத்தால் பயமாக உள்ளது. என்னை பொருத்தவரை பந்து மற்றும் பிட்ச் ஆகியன இங்கிலாந்து எவ்வாறு விளையாடப் போகிறது என்பதை தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்”

“நாம் எந்த வகையான கிரிக்கெட்டை முன்னோக்கி விளையாடப் போகிறோம் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 100 வருடங்களையும் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் அப்படியேதான் உள்ளது. அதில் எப்போதாவது ஒருசில தொடர்கள் மட்டுமே இது போல அதிரடியாக விளையாடி பார்த்துள்ளோம். எனவே இதே மாதிரியான கிரிக்கெட்டை அனைத்து தருணங்களிலும் விளையாட முடியுமா என்பது விவாதத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தின் இந்த புதிய அதிரடி பாதை எந்தளவுக்கு நீடிக்கும் என்பதை பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான பவுலர்களைக் கொண்ட நாங்களும் ஒரு கை பார்க்க காத்திருக்கிறோம் என்று இந்தியாவை தோற்கடித்த பின் ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே “பஸ்பால்” என்றழைக்கப்படும் அதிரடி ஆட்டம் முட்டாள்தனமானது என்பதை ஒப்புக்கொண்ட பிரெண்டன் மெக்கலம் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் விளையாட வேண்டும் என்றும் வெளிப்படையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement