இஷாந்த் சர்மாவின் 12 வருஷ கிரிக்கெட்டுல இதுதான் முதல் முறையாம் – விவரம் இதோ

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுள் ஹாக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ishanth

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அதன்படி 2007 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இசாந்த் சர்மா இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 283 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுவரை அவர் ஏழு முறை 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் வீழ்த்தி இருந்தாலும் இந்தியாவில் அவர் இப்போது தான் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Ishanth-2

அதன் மூலம் 12 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இசாந்த் சர்மா சாதனை படைத்தார். வெளிநாட்டு மைதானங்களில் மட்டுமே இதுவரை 5 விக்கெட்டுகள் மேல் வீழ்த்திய இஷாந்த் இப்போதுதான் முதன்முறையாக இந்தியாவில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பது நம்பமுடியவில்லை என்றாலும் உண்மைதான்.

Advertisement