பந்துவீச்சாளர்களிடையே இருக்கும் இந்த போட்டிதான் எனது சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் – இஷாந்த் பேட்டி

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ishanth

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியதாவது : கொல்கத்தா மைதானம் வேகத்தில் சற்று கூடுதலாகவே இருப்பதாக உணர்ந்தேன். நான் எனது பந்துவீச்சில் புதிய முயற்சிகள் எதையும் செய்யவில்லை வழக்கம் போல் என்னுடைய மனநிலையை அப்படியே வைத்துக் கொண்டு பந்து வீசினேன். வெளிநாடுகளில் எவ்வாறு சிறப்பாக பந்து வீச முடிகிறதோ அதனை போன்று இந்தியாவிலும் பந்துவீச நினைத்தேன்.

Ishanth-1

எனவே இன்றைய போட்டியில் எனது மனநிலை திடமாக இருந்தது. அதன்காரணமாக என்னால் சிறப்பாக பந்துவீசிய முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு இடையே உள்ள ஆரோக்கியமான போட்டியே எங்கள் அனைவரது சிறப்பான பந்து வீச்சு காரணமாக நான் கூறுவேன். மேலும் எனது சிறப்பான பந்துவீச்சிற்கும் அதையே நான் காரணமாக கூறுகிறேன். இந்த போட்டியில் சஹா சிறப்பாக செயல்பட்டார் உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை அவர் இந்த போட்டியில் மீண்டும் நிரூபித்துள்ளார் என்றும் இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Ishanth-2

மேலும் கிரிக்கெட் போட்டியை நான் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். இனிமேல் எனக்கு ஏதும் வேண்டாம் என்னால் முடிந்தவரை தெடர்ந்து நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று இஷாந்த் சர்மா கூறினார்.

Advertisement