ஸ்மித்தை நோக்கி நான் குரங்கு போல கேலி செய்ய இதுவே காரணம் – இஷாந்த் சர்மா ஓபன் டாக்

Ishanth-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறக்கும் அளவிற்கு போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

Ishanth 2

- Advertisement -

நீண்ட நேரம் களத்தில் நின்ற அவர் பந்து வீச்சாளர்களை சீண்டியபடியே இருந்தார். இந்த செயலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா அவருக்கு எதிரே குரங்கு போல பாவனை காட்டி கிண்டல் செய்தார். அவர் தலையை ஆட்டிய அந்த புகைப்படம் மற்றும் வீடியோ அனைத்தும் இணையத்தில் வைரல் ஆனது.

அப்போது வைரலான அந்த செய்கை குறித்து தற்போது இஷாந்த் சர்மா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. பேட்ஸ்மேனை உணர்ச்சிவசப்பட வைக்கும் பழக்கம் அனைத்து பந்துவீச்சாளர்களிடமும் உள்ள ஒரு குணம் தான்.

Smith

அதே போன்று நானும் ஸ்மித்தை பார்த்து வெறுப்பேற்றினேன். அவரது கவனத்தை சிதற செய்த செயலாகவே நான் இதைப் பார்க்கிறேன். மற்றபடி அதில் எந்த தவறும் இல்லை அதே போன்று கோலியும் இதுபோன்ற கண்ணியமான ஆக்ரோஷத்தை மதிப்பவர். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் கோலி என்னை நோக்கி உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

மேலும் நான் அன்று ஆக்ரோஷமாக பந்து வீசி அதை அவர் ரசித்துக் கொண்டிருந்தார் என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் ஸ்மித் மற்றும் இஷாந்துக்கு எதிராக போட்டி கடுமையாக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ishanth
மேலும் இம்முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஸ்மித்தை நோக்கி அவ்வாறு செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இசாந்த் சர்மா போட்டியில் ஆக்ரோஷம் என்பது போட்டிக்கு முக்கியம்தான் ஆனால் எப்போதுமே கிண்டலடிப்பது எனது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement