இந்திய அணியில் இந்த சிஸ்டத்தை கொண்டு வந்ததே விராட் கோலி தான் – இஷாந்த் சர்மா புகழாரம்

Ishanth-1
- Advertisement -

இந்திய அணியில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மேலும் வீரர்களின் ஃபிட்னஸ் விஷயத்திலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை அளித்து வருகிறது. வீரர்கள் அதிகப்படியான எடையுடனும், ஃபிட்னஸ் இல்லாமலோ அணிக்குள் வருவதில்லை. மேலும் ஒவ்வொரு போதிய இடைவேளையின் போதும் வீரர்களுக்கு ஃபிட்னஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.

IND

- Advertisement -

எந்தவொரு வீரரும் இந்தியி அணியில் தேர்வாக வேண்டும் என்றால் முதலில் பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்பின்னரே அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு இந்திய அணி தற்போது வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் முக்கியத்துவம் காட்டுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் ஃபிட்னஸ் சிஸ்டத்தை மாற்றியவர் விராட் கோலி தான் என்று இஷாந்த் ஷர்மா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : முன்பெல்லாம் வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பு சதவீதம் குறித்து யாரும் பேசியதே கிடையாது. ஆனால் அந்த சோதனையை தனக்குத் தானே முதலில் செய்துகொண்டு கோலி தன்னுடைய உடம்பிலிருந்த கொழுப்புகளைக் குறைத்து எடையையும் கட்டுக்குள் கொண்டுவந்து உடல் தகுதியை சோதனை செய்து பார்த்து பிறகு மீண்டும் அதை அணிக்குள் கொண்டு வந்தவர் கோலி தான்.

Ind-lose

வீரர்கள் பிட்னஸ் தரத்தை முற்றிலுமாக மாற்றியது விராட் கோலி தான். நன்றாக சாப்பிட்டால் களத்தில் திடமுடன் விளையாட முடியும். உடற் தகுதியை பராமரித்தால் எனர்ஜியுடன் நாள் முழுக்க விளையாட முடியும் என்பதால் பிட்னஸ் விஷயத்தில் கோலி யாராக இருந்தாலும் கறாராக இருக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இந்திய அணி நிர்வாகமும் பிட்னஸ் விஷயத்தில் கவனத்தைச் செலுத்தியது.

Ishanth

வீரர்கள் உடல் தகுதியுடன் இருப்பதாலேயே போட்டி முழுவதும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடிகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவை சர்வதேச அணிகளுக்கிடையே முன்னணியில் கொண்டு சென்றது கோலி தான். நான் அவரது உடல் தகுதி விஷயத்திலும் உன்னிப்பாக கவனித்து வந்ததில் கோலி தன்னைத்தானே மிக ஒழுக்கமாக வைத்துக் கொள்கிறார் என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement