மூன்று வாரம் சாப்பிடாமல் தூங்காமல் அழுதேன். என் வாழ்வின் மோசமான போட்டி இதுதான் – இஷாந்த் சர்மா ஓபன் டாக்

Ishanth
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா இந்திய அணிக்காக 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டியில் விளையாடி 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் டெஸ்ட் அணியின் சீனியர் வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Ishanth-2

இந்தக் கொரோனா ஓய்வு நேரத்தில் வீரர்கள் அனைவரும் தங்களது இக்கட்டான சூழ்நிலை குறித்து அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில் தனது கேரியரில் நடந்த மிக மோசமான சம்பவம் குறித்து கிரிக்இன்போ இணையதளத்திற்கு அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் 2013ஆம் ஆண்டு மொகாலியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதுகுறித்து பேசிய இஷாந்த் கூறுகையில் : 2013 ஆம் ஆண்டு மொகாலியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தான் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய போட்டி. ஜேம்ஸ் பாக்னர் எனது ஓவரில் ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் வெற்றியும் பெற்றது. அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக நான் அமைந்து விட்டேன் என்பது எனக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது.

Ishanth-1

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அழுதுகொண்டே இருந்தேன். இரண்டு வாரங்களில் யாரிடமும் நிறைய பேசவில்லை. எந்த விடயத்திலும் கலந்து கொள்ளவில்லை, தனியாகவே இருந்தேன், நிறைய அழுதேன். எனது காதலிக்கு போன் செய்து குழந்தை போல அழுது கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களும் நான் சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை அதன் பின்னர் தான் என் மனது சரியானது.

ishanth

இந்த ஒரு சம்பவம் என் கேரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று கூறினார். இஷாந்த் சர்மா கூறியதுபோல ஒரு கட்டத்தில் 3 ஓவர்களில் 44 ரன்கள் ஆஸ்திரேலிய அணி குவிக்கவேண்டும் என்ற சூழ்நிலையில் ஒரே ஊரில் ஜேம்ஸ் பாக்னர் 30 ரன்களை குவிக்க அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து இவரை தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement